தமிழ்நாடு

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான மனோஜ் மருத்துவமனையில் அனுமதி

DIN

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாளையாறு மனோஜ் (41), மூச்சுத் திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் ஓம் பகதூர், இவர் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி 11 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தனிப்படையினர் கேரளத்தைச் சேர்ந்த சதீஷன், திபு, சந்தோஷ், உதயகுமார், வாளையாறைச் சேர்ந்த மனோஜ், ஜம்ஷேர் அலி, ஜிதின் ஜாய், மற்றொரு மனோஜ், குட்டி என்கிற பிஜின் உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தனர்.
கோவை மத்திய சிறையில் இருந்த வாளையாறு மனோஜுக்கு திடீரென ஞாயிற்றுக்கிழமை இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு சிறைத் துறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறைக் கைதிகளுக்கான தனிப்பிரிவில் வைத்து, போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சயன் சிறையில் அடைப்பு: கொடநாடு காவலாளி கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த சயன் ஏப்ரல் 29-ஆம் தேதி பாலக்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தார். பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக மே 17-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து ஜூன் 6-ஆம் தேதி கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து வலி இருப்பதாகத் தெரிவித்ததால், ஜூன் 7-ஆம் தேதி மீண்டும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது சயனின் உடல் நிலை முன்னேற்றமடைந்துள்ளதால், அவர் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT