தமிழ்நாடு

பாஜக வேட்பாளருக்கு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ந.ரங்கசாமி கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவருக்கு என்.ஆர். காங்கிரஸ் முழு ஆதரவைத் தரும் என்றார் ரங்கசாமி.
மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ள புதுச்சேரி சட்டப்பேரவையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட என்.ஆர். காங்கிரஸ் பிரதான எதிர்க் கட்சியாகத் திகழ்கிறது. மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
இருப்பினும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை. தற்போது பாஜக அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவளித்ததின் மூலம் அந்தக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறது என்.ஆர்.காங்கிரஸ்.
இதற்கிடையே, என்.ஆர். காங்கிரஸுக்கு மக்களவையில் ஓர் உறுப்பினர் உள்ளார். ஆனால், சட்டப்பேரவையில் உள்ள 8 எம்.எல்.ஏக்கள் மத்தியில் வேறுபாடு தோன்றியுள்ளது. டிபிஆர். செல்வம், காரைக்கால் திருமுருகன் தனித்துச் செயல்பட்டு வருகின்றனர்.
மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் ஆளும் காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT