தமிழ்நாடு

புதிய மணல் குவாரிகளை மூட வேண்டும்: ராமதாஸ்

DIN

தமிழகத்தில் புதிதாகத் திறக்கப்பட்டு வரும் மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் செயல்பட்டு வந்த 38 மணல் குவாரிகளில் பெரும்பாலானவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியானதைத் தொடர்ந்து, அவை சில வாரங்களுக்கு முன் மூடப்பட்டன. புதிதாக 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
எனவே, குவாரிகள் அமைக்கப்படவுள்ள பகுதி மக்கள் அரசின் முடிவுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாகப் பொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது மனித உரிமை மீறிய செயலாகும்.
மணல் குவாரிகள் உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல்நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், புதிய குவாரிகளைத் திறந்து தமிழகத்தைப் பாலைவனமாக்கிவிடக் கூடாது.
போராட்டம் நடத்தும் மக்களை அடக்குமுறை மூலம் முடக்கிவிடலாம் என அரசு நினைக்கிறது. இந்திய வரலாற்றில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்ற சர்வாதிகாரிகள்தான் மண்ணைக் கவ்வியிருக்கிறார்களே தவிர, போராட்டம் ஒருபோதும் வீழ்ந்ததில்லை. எனவே, வரலாற்றை உணர்ந்து தமிழகம் முழுவதும் புதிதாகத் திறக்கப்பட்ட மணல் குவாரிகளை
மூட வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி வாய்ப்பு: தமிழகத்தில் 3,000-த்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதால், அவற்றில் பணியாற்றி வந்த 15,000-த்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றியவர்களுக்கு இரு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்பதால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. எனவே, டாஸ்மாக் பணியாளர்களில் உபரியாக உள்ளவர்களுக்கு தமிழக அரசின் பிற துறைகளில் அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ற பணிகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT