தமிழ்நாடு

குழந்தையின் கை, கால்களைக் கட்டிப்போட்டு அடித்த அங்கன்வாடி காப்பாளர்!!

சூலூர் அருகே குரும்பாளையத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் மூன்று வயதுக் குழந்தையை காப்பாளர் கட்டி வைத்து அடித்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சூலூர் அருகே குரும்பாளையத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் மூன்று வயதுக் குழந்தையை காப்பாளர் கட்டி வைத்து அடித்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சிக்குட்பட்ட குரும்பாளையத்தில் வசித்துவரும் விஜயகுமார், நதியா தம்பதியரின் மகன் அஷ்வத். மூன்று வயது நிரம்பிய அஷ்வத்தை அருகாமையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளனர். கடந்த புதன் கிழமை குழந்தை அம்மா வேண்டும் என்று தொடர்ச்சியாக அழுததை பொறுக்க முடியாத அங்கன்வாடி காப்பாளர் மல்லிகா குழந்தையின் கை, கால்களைக் கட்டி வைத்து அடித்துள்ளார்.

மாலை குழந்தையை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வந்தபோது, குழந்தை தூங்குவதாக கூறி இரவுதான் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். வீட்டிற்குச் சென்றதும் குழந்தைக்குச் சிறிது நேரத்தில் வலிப்பு வந்ததைத் தொடர்ந்து மருத்துவரிடம் குழந்தையை தூக்கிச் சென்றனர் பெற்றோர்கள்.

அஷ்வத்தை மருத்துவர் பரிசோதித்தபோது உடல் முழுவதும் காயங்கள் இருப்பதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ந்துள்ளனர். உடனே காவல் நிலையத்தில் இதுபற்றிய புகாரைத் தெரிவித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட சூலூர் காவலர்கள் வியாழக்கிழமை அங்கன்வாடி காப்பாளர் மல்லிகாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT