தமிழ்நாடு

இலங்கைச் சிறையில் 28 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

DIN

இலங்கைச் சிறையிலுள்ள 28 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, முதல்வரின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மிழக மீனவர்கள் 8 பேர் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட மற்றொரு சம்பவம் பற்றி தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரப் படகில் 8 தமிழக மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதியன்று பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் நீரிணைப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 23 ஆம் தேதியன்று அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றனர்.
61 நாள்கள் மீன்பிடி தடை காலத்துக்குப் பிறகு மீன்பிடிக்கத் தொடங்கிய பிறகு இதுவரை 3 படகுகளில் சென்ற 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய மீன்பிடி பகுதியில் கடின உழைப்பில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும், கடத்தலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகும் நிலை பற்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் நானும் உங்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம்.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கடத்தப்படுவது மற்றும் தாக்கப்படுவதால் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதற்கான அச்சம் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரும் கைது நடவடிக்கையால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் கொந்தளித்துப் போய் உள்ளனர்.
இந்த பிரச்சினை பற்றி தொடர்ந்து தமிழக அரசு கூறி வந்தாலும், அப்பாவி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னையின் முடிவை நாங்கள் இன்னும் காண முடியவில்லை. மீனவர்களின் இந்த வாழ்வாதாரப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து எடுத்து வரும் முயற்சிகளை நொறுக்கும் அளவுக்கு இந்த கைது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இலங்கைக் கடற்படையினரால் பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வுக்கு கடுமையான எதிர்ப்பை இலங்கை அரசிடம் பதிவு செய்வதற்காக மத்திய வெளியுறவுத் துறைக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.
அதோடு அங்கு கைது செய்யப்பட்டு பிடித்து வைக்கப்பட்டுள்ள 28 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்கும்படி இலங்கை அரசிடம் வலியுறுத்தும்படியும் மத்திய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT