தமிழ்நாடு

10 நாள்களில் பயிர் இழப்பீட்டுத் தொகை: அமைச்சர் இரா. துரைக்கண்ணு

DIN

தமிழகத்தில் 2016-17 ஆம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 10 நாள்களில் வரவு வைக்கப்படும் என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி :
தமிழகத்தில் 2016}17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பயிர் இழப்புக்கு ரூ. 928 கோடி வழங்க 4 காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
இத்தொகை 10 நாட்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடியை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் முன்னோடியாகச் செய்தார். இதைப் பார்த்து மற்ற மாநிலங்கள் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்கின்றன. பருவமழை தொடர்கிறது.
இதேபோல வடகிழக்குப் பருவமழையும் சரியாக இருக்கும் என நம்புகிறோம்.
குறுவைத் தொகுப்புத் திட்டம் ரூ. 56.92 கோடியில் செயல்படுத்தப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT