தமிழ்நாடு

நீட் தேர்வை எதிர்கொள்ள 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்

DIN

மத்திய அரசு கொண்டுவரும் பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 12 வார்டுகளில் 14 இடங்களில் ரூ. 21 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்த் தேக்கத் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீட் தேர்வு குறித்து 85 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள், வரைபடங்கள் அடங்கிய புத்தகம் தயாராகி வருகிறது. இதுகுறித்து, சட்டப்பேரவையில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT