தமிழ்நாடு

ரமலான் பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

DIN

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்: சகிப்புத்தன்மை, உண்மையான வாழ்க்கை, ஈகை, இரக்கம் ஆகியவற்றையே புனித நூலான குரான் வலியுறுத்துகிறது. அமைதி, ஒற்றுமை, இணக்கமானச் சூழலை உருவாக்க முகமது நபிகளின் போதனைகளை பின்பற்றி வாழ்வோம்.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: இறைவனின் அருளைப் பெறுவதற்காக இந்தப் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து, ஈகை குணங்களை வளர்த்து, இறை சிந்தனைகளை மனதில் நிறுத்தி ரமலான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுகின்றனர்.
இந்தப் பெருநாளில் உலகில் அமைதி நிலவவும், அன்பு தழைக்கவும் வாழ்த்துவதோடு, இஸ்லாமியர்களுக்கு ரமலான் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT