தமிழ்நாடு

மணல் கடத்தல்: 3 லாரிகள், 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

DIN

காவேரிபாக்கம் அருகே மணல் கடத்தியதாக 3 டிப்பர் லாரிகள் மற்றும் 5 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
நெமிலி வட்டாட்சியர் பாஸ்கரன், காவேரிபாக்கம் வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமு, நவீன், சீனு செளந்திரராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் திங்கள்கிழமை மாமண்டூர், அத்திப்பட்டு, வேகா மங்கலம் பாலாற்று பகுதிகளில் மணல் கொள்ளை தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகள் மற்றும் 5 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில் மணல் எடுத்து செல்ல எவ்விதமான உரிமமும் இல்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்த் துறையினர் 3 டிப்பர் லாரிகள் மற்றும் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, அவளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT