தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரியைக் குறைக்காவிட்டால் பட்டாசு தொழிலைக் காப்பாற்ற முடியாது: அன்புமணி ராமதாஸ்

DIN

பட்டாசு, துணிகள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்காவிட்டால் அந்தத் தொழில்களைக் காப்பாற்ற முடியாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி எனும் சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கு பல்வேறு தொழில்துறையினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
ஜி.எஸ்.டி வரி விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதால், பெருமளவில் பாதிப்புகளும், வேலை இழப்புகளும் ஏற்படும் என்று தொழில்துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஜி.எஸ்.டி எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரியால் கடுமையாகப் பாதிக்கப்படும் துறைகளில் ஜவுளித் துறை முக்கியமானதாகும்.
இத்துறையில் துணி நெய்வதற்காக நூல்களை கொள்முதல் செய்வதில் தொடங்கி வெளுத்தல், சாயம் நனைத்தல், தைத்தல் உள்ளிட்ட அனைத்து நிலைகளும் தனித்தனியானதாகக் கருதப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வரி விதிக்கப்படுகிறது. 5 முதல் 18 சதவீதம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதால் துணிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதனால் விசைத்தறித் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
பட்டாசுகள் மீது 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்க முடியாத ஒன்று. பட்டாசு வரிக்கான உள்ளீட்டு வரியை திரும்பப்பெற முடியும் என்பதால் பட்டாசுத் தொழிலுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கூறப்படுகிறது.
இது நியாயமற்ற வாதம். பட்டாசு உற்பத்தி முற்றிலுமாக முடங்கி விடும். பட்டாசுகள் மீதான ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதம் முதல் 12 சதவீதமாகக் குறைத்தால் மட்டும்தான் பட்டாசுத் தொழிலைக் காப்பாற்ற முடியும்.
எனவே, பட்டாசு, துணிகள் மீதான ஜிஎஸ்டி வரியை உடனே மத்திய அரசு குறைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT