தமிழ்நாடு

தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

DIN

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், திருச்சி மற்றும் கடலூரில் மட்டும் திங்கள்கிழமை 100 டிகிரி வெயில் பதிவானது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி வால்பாறையில் 70 மி.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 60 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், குழித்துறை, தக்கலை, குளச்சல் ஆகிய இடங்களில் 40 மி.மீ., செங்கோட்டை, தென்காசி, பேச்சிப்பாறை, பூதப்பாண்டியில் 20 மி.மீ., மழை பதிவானது.
பொள்ளாச்சி, இளையான்குடி, பொன்னேரி, ஆர்.எஸ்.மங்கலம், சேரன்மாதேவி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் பல இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)

கடலூர், திருச்சி 100
சென்னை 98

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT