தமிழ்நாடு

தாமிரபரணியிலிருந்து நீர் எடுக்கத் தடையில்லை: மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள்

DIN

தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் நீர் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்தது.

நெல்லையைச் சேர்ந்த ராகவன் என்பவர், தூத்துக்குடி பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் குளிர்பான ஆலைகளுக்கு நீர் வழங்குவது குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றும், அதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கோக் மற்றும் பெப்சி ஆலைகள் உட்பட 25 தொழிற்சாலைகள் உள்ளன. இவை அனைத்தும் தாமிரபரணி ஆற்றிலிருந்து நாளொன்றுக்கு 47 லட்சம் லிட்டர் நீர் எடுப்பதால் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டதுடன் தற்போது குடிநீருக்கே தட்டுப்பாடு வந்துள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் வேல்முருகன் கொண்ட அமர்வுக்கு இன்று விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து நீர் எடுக்கத் தடை விதிக்க இயலாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT