தமிழ்நாடு

தாமிரவருணியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

DIN

தாமிரவருணியில் இருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கத் தடை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.எம்.ராகவன் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் குளிர்பான நிறுவனங்கள் உள்பட 25 தொழிற்சாலைகளுக்கு தாமிரவருணியில் இருந்து தண்ணீர் வழங்கத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தாமிரவருணியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழக்கிலும் முடிவு எடுக்க முடியும். தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்குவது தொடர்பான அரசின் முடிவு மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
விதிகள் சரியாக பின்பற்றப்படாத பட்சத்தில் மட்டுமே நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வழக்கில், ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவிர வேறு விதிமீறல்கள் தொடர்பாக மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. தண்ணீர் வரத்து, தண்ணீர் பயன்பாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், தாமிரவருணியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவது குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பார்க்கையில், தண்ணீர் பயன்பாடு தொடர்பாக முடிவெடுப்பது சிக்கலான ஒன்று. இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் போதி6/27/2017 11:14:59 டஙய நிபுணத்துவம் பெறவில்லை. இதில் அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.
மேலும், தாமிரவருணியில் உள்ள தண்ணீர் வரத்தைப் பொறுத்து சிப்காட்டில் உள்ள ஜவுளி மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை விட 50 சதவீத நீரை மட்டுமே வழங்க மே மாதத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT