தமிழ்நாடு

மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு  

DIN

சென்னை: மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு விபரம் வருமாறு:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினா கடற்கரையில் சிறப்பு நினைவு மண்டபம் கட்டப்படும்.

இதற்காக சர்வதேச அளவில் சிறந்த கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்.

அவர்கள் உருவாக்கித் தரும் வரைபடங்களிலிருந்து சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில்  கட்டுமானப் பணிகள் நடைபெறும்.

அத்துடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக சிறப்பு வளைவு ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT