தமிழ்நாடு

உயிருள்ளவரை சசிகலா  உறவினர்களை கட்சியில் அனுமதிக்க மாட்டேன் என்றார் ஜெயலலிதா: ஓ .பி.எஸ் தகவல்!

தான் உயிருடன் இருக்கும் வரை சசிகலா உறவினர்களை கண்டிப்பாக கட்சியில் அனுமதிக்க மாட்டேன்  என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக ...

DIN

சென்னை: தான் உயிருடன் இருக்கும் வரை சசிகலா உறவினர்களை கண்டிப்பாக கட்சியில் அனுமதிக்க மாட்டேன்  என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களைசந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எனக்கு சசிகலா குடும்பத்தினர் மூலம் எனக்கு பல தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயன்றோம் ஆனால் அதற்கு சசிகலா குடும்பத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை

அதேபோல ஜெயலலிதாவிற்கு தீவிரமான நோய் எதுவுமில்லை. எனவே அவரின் மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.ஜெயலலிதாவின் மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் உள்ள சந்தேகம் தீரும் வரை மக்களின் போராட்டமும் தீராது

தான் உயிருடன் இருக்கும் வரை சசிகலா உறவினர்களை கட்சியில் அனுமதிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா என்னிடம் கூறினார்.

இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT