தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 119 பேர் கைது

ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்துக்கு எதிராக, கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 119 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

DIN

ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்துக்கு எதிராக, கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் 119 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக மாணவ, மாணவியர் 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வடவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து, பிற்பகல் 1 மணி அளவில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 119 மாணவர்களை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT