தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிகலா, ஓபிஎஸ் இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  

நடைபெற இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக ...

DIN

புதுதில்லி: நடைபெற இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளாளர் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். பிறகு அவர் முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம் தலைமையிலான கட்சியின் மூத்த நிர்வாகிகள் தனி அணியாக செயல்படுகின்றனர். மேலும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அடங்கிய தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக  நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். அதற்காக சசிகலாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் அணியினர் தாங்கள் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்தனர். மேலும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கோரி பன்னீர்செல்வம் நேரடியாக தில்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தார்.

இந்நிலையில் நடைபெற இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளாளர் சசிகலா மற்றும் அதிருப்தி அணியின் பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT