ஆர்.கே நகர் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது: வைகோ அறிவிப்பு
வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது என்று ...
சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுகவின் உயர்மட்ட ஆலோசனைக்கு குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பது என்று கட்சியின் உயர்மட்டக் குழு கூடி முடிவெடுத்துள்ளது. எனவே எந்த கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தருவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.