தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 29 அடியாக சரிவு

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 29.03 அடியாக சரிந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாதது, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாகச் சரிந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நொடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக, நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீர்த் தேவைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால், திங்கள்கிழமை காலை நீர்மட்டம் 29.03 அடியாகச் சரிந்தது. மேலும், நீர் இருப்பு 7.14 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT