தமிழ்நாடு

தமிழகத்தில் ஆறு மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும்: வாகை சந்திரசேகர்

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் என வலங்கைமானில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வாகை சந்திரசேகர் கூறினார்.

தினமணி

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும் என வலங்கைமானில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வாகை சந்திரசேகர் கூறினார்.

வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் திமுக பொதுக் கூட்டம் வலங்கைமான் கடை வீதியில் அண்மையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை வகித்தார். மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வாகை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:
மொழி, இனம், கலாசாரம் ஆகியவற்றை திமுக தொடர்ந்து காத்துவருகிறது. தமிழகத்தில் இசை நாற்காலியில் உட்காருவதைப்போல் முதலமைச்சர்கள் மாறிமாறி உட்கார்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்றார்.

கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர்கள் தெட்சிணாமூர்த்தி (கிழக்கு), வீ.அன்பரசன் (மேற்கு),  இளைஞர் அணி தலைவர் செல்லையன், மகளிர் அணி துணை அமைப்பாளர் பவானி, நகரச் செயலாளர் சிவநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைய முதல்வர் முன்வர வேண்டும்: சரத் பவார்!

இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்! ஹாங் காங் சிக்ஸஸ் தொடரில்..!

இராமாயணம் தொடர் நிறைவடைகிறது! புதிய ஆன்மிக தொடர் அறிவிப்பு!

துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் திடீர் சோதனை... ஏன்?

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா! மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT