முகப்பு
தமிழ்நாடு

விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் திடீர் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு

விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் திடீர் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று நள்ளிரவு திடீரென சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் ஆண்டு தோறும் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு செல்வதைப் போல, இந்த ஆண்டும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், ஓரிரு நாட்களில் பரிசோதனைகள் முடிவடைந்ததும் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்தை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு வரவேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →