தமிழ்நாடு

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம்: கையெழுத்திட்டது மத்திய அரசு!   

நெடுவாசல் பொதுமக்களின் எதிர்ப்பையும்  மீறி ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது

தினமணி

புதுதில்லி: நெடுவாசல் பொதுமக்களின் எதிர்ப்பையும்  மீறி ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமிக்கு அடியில்  இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் திட்டமிட்டபடி நாடு முழுவது 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டதிற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்தது.

அதன்படி இன்று புதுதில்லியில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய பெட்ரோலியத்துறை சார்பாக உயர் அதிகாரியான ராகேஷ் மிஸ்ரா ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கர்நாடகாவின் ஜெம் லாபாரட்டரீஸ் நிறுவனமும், காரைக்காலில் பாரத் ரிசோர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளன.

இதனைத் தொடர்ந்து திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டங்கள் மீண்டும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோட்டங்களுக்கு சுத்திகரிப்பு நீரை விநியோகிக்க ரூ.90 கோடி திட்டத்திற்கு டிஜேபி ஒப்புதல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் பருவகால முன்னெச்சரிக்கை தூய்மைப் பணி

பாதசாரி மீது வாகனம் மோதிய வழக்கில் இளைஞா் கைது

சட் பூஜைக்காக யமுனை கரையில் தற்காலிக படித்துறை அமைக்கப்படும்: தில்லி முதல்வா் தகவல்

தில்லியில் 164 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT