ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மாநில அரசு துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது என்று திமுக செயல் செலைவர்
தமிழ்நாடுஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மாநில அரசு துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது என்று திமுக செயல் செலைவர்
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மாநில அரசு துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது என்று திமுக செயல் செலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. கடும் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திமுக செயல் தலைவரும் தமிழக எதிர் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறுகையில், விவசாயிகள் பிரச்சனை குறித்து கிஞ்சித்தும் மாநில அரசு கவலைப்படவில்லை. இது கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருவது வேதனையாக உள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மாநில அரசு துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரினார்.