முகப்பு
file photo
தமிழ்நாடு

சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: வாகன நெரிசல்; மக்கள் அவதி

மெட்ரோ சுரங்கப் பாதைப் பணிகள் நடந்து வரும் சென்னை அண்ணா சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் உருவானது. அதில் இருந்து சிமெண்ட் கலவை வெளியேறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு

சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: வாகன நெரிசல்; மக்கள் அவதி

மெட்ரோ சுரங்கப் பாதைப் பணிகள் நடந்து வரும் சென்னை அண்ணா சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் உருவானது. அதில் இருந்து சிமெண்ட் கலவை வெளியேறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:09 PM
file photo
பகிர்:


சென்னை: மெட்ரோ சுரங்கப் பாதைப் பணிகள் நடந்து வரும் சென்னை அண்ணா சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் உருவானது. அதில் இருந்து சிமெண்ட் கலவை வெளியேறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மிகவும் பரபரப்பான சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. சில கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த போக்குவரத்துக் காவல்துறையினர், சாலையின் ஒரு பக்கமாக வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். இதனால் ஓரளவுக்கு போக்குவரத்து சீரானது.

பள்ளம் ஏற்பட்ட இடத்தை மூடும் பணியில் மெட்ரோ பணியாளர்கள் ஈடுபட்டனர். பள்ளம் ஏற்பட்ட இடத்துக்கு அருகே மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், அதனால்தான் இந்த பள்ளம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2010ம் ஆண்டு முதல் சென்னையின் முக்கியப் பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. சுரங்கப் பாதைகள் அமைப்பதற்காக, பூமிக்குக் கீழே பள்ளங்கள் தோண்டப்படுவதால் பல பகுதிகளில் அடிக்கடி இப்படி பள்ளம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →