தமிழ்நாடு

இரட்டைஇலை சின்னத்திற்கு லஞ்சம்: டி.டி.வி.தினகரனுக்கு மே 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

DIN

புதுதில்லி: தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டைஇலை சின்னத்தினை மீண்டும் பெறுவதற்காக, ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு மே 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அதிமுகவில் ஏற்பட்ட பிளவினால் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை தற்பொழுது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சின்னத்தினை திரும்பப்பெற ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டி.வி.தினகரன் கைது செய்யயப்பட்டுள்ளார். தில்லி ஹசாரி பார்க் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தினகரனை விசாரணை செய்யும் பொருட்டு ஐந்து நாள் போலீஸ் காவல் அளித்து நீதின்றம் உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து சென்னைக்கு அவரை அழைத்து வந்த போலீஸஸர அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.மேலும் சில சோதனைகளும் முடிந்த நிலையில், போலீஸ் காவல் முடிந்து தில்லி நீதிமன்றத்தில் தினகரன் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அவருடன் அவரது நண்பர் நாகார்ஜுனாவும் ஆஜர் செய்யப்பட்டார்.

அப்பொழுது இருவருக்கும் மே 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தினகரனுக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவரை நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு பதிலாக காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார்.

அதே சமயம் தினகரன் தரப்பில் அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தில்லி,மாநில காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT