முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வை எதிர்கொள்ள பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்: கே.வி. தங்கபாலு பேட்டி

நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் தமிழக அரசு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றார்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:29 PM
பகிர்:

புதுக்கோட்டை: நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் தமிழக அரசு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு.

புதுக்கோட்டையில் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலருமான ஜி.எஸ். தனபதியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை, மக்களின் விருப்பத்துக்கு எதிராக வேறு இடங்களில் திறப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். நீட் தேர்வில் மாணவ, மாணவிகளிடம் மேற்கொண்ட கெடுபிடிகள் கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தின் கல்விப் பாடத்திட்டத்தில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு உள்கட்சி பிரச்னை. இதனால், மக்கள் நலத் திட்டங்களில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.