முகப்பு
தமிழ்நாடு

அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை முதல்வர் 'திடீர்' ஆலோசனை!

தில்லியில் நாளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்த உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக, அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

சென்னை: தில்லியில் நாளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்த உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக, அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திர நம்பகத்தன்மை தொடர்பாக தில்லியில் நாளை இந்திய தேர்தல் ஆணையம்  அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றினை நடத்த உள்ளது.  இந்த கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுக  தலைமையகத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மக்ககளவை  துணை சபாநாயகருமான் தம்பிதுரையும்  பங்கேற்கிறார்.

நாளைய கூட்டத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →