பிளஸ் டூ தேர்வில் முழு மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை வெளியீடு
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர்
தமிழ்நாடுபிளஸ் டூ தேர்வில் முழு மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை வெளியீடு
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர்
சென்னை: தமிழகம்,புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டார்.
தேர்வு முடிவுகளை www.tnresults.in, www.tnresults.nic.in, www.tnresults.gov.in ஆகிய இணைய தளங்களில் பார்க்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவுகள் செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வில் பாட வாரியாக 200க்கு 200 (முழு மதிப்பெண்) எடுத்தவர்களின் எண்ணிக்கை விவரம்:
- மொழி பாடத்தில் - முழு மதிப்பெண் இல்லை
- கணிதம் - 3656
- இயற்பியல் - 187
- வேதியியல் - 1123
- உயிரியல் - 221
- தாவரவியல்- 22 பேர்
- விலங்கியல் - 04
- கணினி அறிவியல் - 1666
- புள்ளியல் - 68
- வணிகவியல் - 8301
- வணிகக் கணிதம் - 2551
- வரலாறு -336
- பொருளாதாரம் - 1517
இந்த ஆண்டும் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுமையான தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதினர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.