தமிழ்நாடு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர்ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

DIN

சென்னை:  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ஸ்ரீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலூர் மாவட்ட காட்பாடியை சேர்ந்த காண்ட்ராக்டர் சேகர்ரெட்டி.அவரது வீடு மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னால் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில்,  178 கிலோ தங்க ம் மற்றும் ரூ.142 கோடி பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.34 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

தன் மீதுசி.பி.ஐ தொடர்ந்த வழக்குகளில் சேகர் ரெட்டி கடந்த மாதம் 20-ஆம் தேதி ஜாமீன் பெற்றார். ஆனால் அவர் மீது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடுத்த அமலாக்கத்துறை அவரை மீண்டும் கைது செய்தது.

இந்நிலையில் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்களிருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிபந்தனை ஜாமினுக்கான பிணைப்பாத்திரங்களை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்வதோடு, தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சேகர் ரெடியுடன் கைது செய்யப்பட்ட பொதுப்பணித்துறை மணல் காண்ட்ராக்டர்களான ராமசந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம்  நிராகரித்து விட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

சூர்யா படத்தில் ஜோஜு ஜார்ஜ்!

SCROLL FOR NEXT