தமிழ்நாடு

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: அமைச்சர் அன்பழகன் பத்திரமாக மீட்பு

DIN

அரக்கோணம்: சென்னையிலிருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்பட பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சென்னையிலிருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நுழையும் போது ரயில் எஞ்சின் உள்பட 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், ரயிலில் பயணித்த தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் உள்பட பயணிகள் அனைவரும் காயமின்றி அதிரிஷ்டவசமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ரயில் மிக குறைந்த வேகத்தில் சென்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், ரயில் தடம் புரண்டதற்கு ரயில் தண்டவாளத்தில் உள்ள இடைவெளி காரணமாக கூறப்படுகிறது.

ரயில்வே அதிகாரிகளின் மேற்பார்வையில் பழுதை சீர்செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT