தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரத்திடம் வாக்குமூலம் பதிவு செய்கிறது சிபிஐ

DIN

சென்னை: ஐஎன்எக்ஸ் குழுமத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் கீழ், கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ வாக்குமூலம் பதிவு செய்து வருகிறது.

2008ம் ஆண்டு சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நிகழ்ந்ததாகப்  புகார் எழுந்தது.

மேலும், ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் 35 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT