பேச்சுவார்த்தை நடத்த இருவரை நீக்க வேண்டும்
அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இருவரை நீக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மதுசூதனன் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இருவரை நீக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மதுசூதனன் கூறினார்.
இதுதொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அளித்த பேட்டி:
அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தைக்காக அழைத்து எங்கள் அணியைக் காலி செய்ய நினைக்கின்றனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார் ஆகியோரை
வெளியேற்றினால்தான் இருதரப்பினருக்கும் இடையே இணக்கமான பேச்சு வார்த்தை நடக்கும்.
மக்கள் செல்வாக்கு பெற்றவராக பன்னீர்செல்வம் உள்ளார். அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெறுவார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும்.
'ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்வு செய்தது ஜெயலலிதா செய்த தவறு' என்று நாஞ்சில் சம்பத் கூறுகிறார். அவர் அதிமுககாரரே இல்லை என்று மதுசூதனன் தெரிவித்தார்.