தமிழ்நாடு

மேலும் 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

DIN

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: ஆந்திரக்கடல் பகுதிகளிலிருந்து அதிகமான வெப்பக் காற்று வீசுவதால், வடதமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும். வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் செவ்வாய்க்கிழமை 114 டிகிரி வெப்பம் பதிவானது. மேலும் தென்மேற்குப் பருவமழை தற்போதுதான் அந்தமான் பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை குறித்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படும். வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னை நகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
10 இடங்களில் சதம்: புதன்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் 10 இடங்களில் 100
டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி வெப்பம் பதிவானது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹுட்டில்) :
திருத்தணி 111
வேலூர் 110
சென்னை 108
கடலூர், கரூர் பரமத்தி,
பாளையங்கோட்டை 107
திருச்சி 106
மதுரை 105
சேலம் 103
தருமபுரி 101
புதுவையில் 107 டிகிரி: புதன்கிழமை நிலவரப்படி புதுச்சேரியில் 107 டிகிரியும், காரைக்காலில் 104 டிகிரி வெயிலும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

சிறுமி தற்கொலை

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஈஷா சிங்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா முதல்முறையாக குவாலிஃபயா்ஸுக்கு தகுதி!

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன்: இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை!

SCROLL FOR NEXT