முகப்பு
தமிழ்நாடு

23-ஆம் தேதி ஆர்ப்பாட்டம், பேரணி: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்படும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:33 PM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்படும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் மு.பிரேமதாசன், கௌரவத் தலைவர் பாலமோகனன் ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
7-வது ஊதியக் குழு பரிந்துரையில் ஊழியர்களுக்கு எதிரான அம்சங்களை மாற்ற வேண்டும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வாக்குறுதியின்படி குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும், வீட்டுவாடகைப்படி, இதர படிகளை மாற்றி அமைக்க வேண்டும் வலியுறுத்தி 23-ம் தேதி தில்லியில் மத்திய நிதி அமைச்சர் அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

புதுவையில் 10 நிர்வாகிகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

புதுவையிலும் 7-வது ஊதியக்குழு 8 மாட ஊதிய நிலுவைத் தொகை தரப்படவில்லை. உள்ளாட்சி, தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை துரிதமாக அமுல்படுத்த  வேண்டும் என வலியுறுத்தி 23-ம் தேதி கம்பன் கலையரங்கில் இருந்து தலைமை தபால் நிலையத்துக்கு பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →