முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா ராஜிநாமா

தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா ராஜிநாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Updated On : 19 மே, 2017 at 12:34 PM
பகிர்:

புதுதில்லி: தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து பவன் ரெய்னா ராஜிநாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பவன் ரெய்னா, தில்லியில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் முக்கிய பாலமாக இருந்து வந்ததுடன் தமிழக அரசுக்கு நல்ல ஆலோசகராகவும் தில்லியில் பணிபுரிந்து வந்தார்.

இரட்டை இலை சின்ன லஞ்ச விவகாரத்தில் இவருக்கு தொடர்பிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ராஜிநாமா செய்துள்ளதாகவும், ராஜிநாமா கடிதத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

மேலும், தில்லி போலீஸார் அவரிடம் ரகசியமான முறையில் விசாரணை நடத்தியதை அடுத்து இந்த நிகழ்வு நடந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.