தமிழ்நாடு

கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தினமணி

உலக அருங்காட்சியக தினத்தையொட்டி கொடைக்கானலிலுள்ள இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள இந்த ஆராய்ச்சி நிலையத்தில், ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் அவற்றின் இயங்கு முறையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர். மேலும் அங்குள்ள 7-க்கும் மேற்பட்ட தொலை நோக்கி கருவிகளில் வானில் உள்ள கோள்களை பார்க்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இங்கு நடைபெறும் ஆராய்ச்சிக் குறித்தும் ஆய்வகத்தில் உள்ள அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். அத்துடன் சூரியனின் செயல்பாடுகள் குறித்தும் காணொலிக் காட்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT