தமிழ்நாடு

வடதமிழகத்தில் 2 தினங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை

DIN

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. மே 29-ஆம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும். இந்நிலையில் கத்திரி வெயிலின் உச்சகட்ட காலம் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

வடதமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய 22 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மே 19 (வெள்ளிக்கிழமை), 20 ஆகிய இரு தினங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

வடதமிழகத்தில் அனல்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செயற்கைக்கோள் படத்தில் அதிக அளவில் மேகம் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, அதிகமாக உருவாகியுள்ள மேகம் காரணமாக மழை பெய்தால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT