முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது: விஜயகாந்த் பேட்டி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது (நாறிப்போய்) என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:34 PM
பகிர்:

சிவகங்கை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது (நாறிப்போய்) என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதாவுடன் சென்று பார்வையிட்டார்.

கீழடியில் நடக்கும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:

அகழ்வாராய்ச்சிப் பணியைப் பார்வையிட வந்தேன். மதுரையில் பிறந்த எனக்கு, இந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றித் தெரிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அது அவரது விருப்பம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

மேலும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இரு அணிகளும் நான்கு ஆண்டுகளைக் கடத்துவது பற்றியே சிந்தனை செய்கின்றன. அவர்களுக்கு மக்களைப் பற்றிய அக்கறை இல்லை என்ற விஜயகாந்த், தமிழகத்தில் ஆட்சி கலைந்து விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்றும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று கூறினார்.

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்ற விஜயகாந்த், ஒரு ஓட்டுக்கு மூன்று முதல்வர் என்ற நிலை தமிழ்நாட்டில்தான் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணிகுறித்து முடிவுசெய்யப்படும் என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →