தமிழ்நாடு

ஓசூர் பகுதியில் சுற்றித்திரியும் 25 யானைகள் பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு

DIN

ஓசூர்: ஓசூர் போடூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் 25 யானைகளை பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர் வனத்துறையினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போடூர் வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரியும் 25 யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

கர்நாடக வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீருக்காக வந்துள்ள யானைக்கூட்டம், போடூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள போடூர், ராமாபுரம், ஆளியாளம், பன்னப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து பயிர்களை அழித்து நாசப்படுத்தி வருகிறது.

குட்டிகளுடன் ஒன்றாகவே சுற்றித்திரியும் 25 யானைகளையும், வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டி வருகின்றனர். அந்த யானைகள் ஓசூர்-தர்மபுரி நெடுஞ்சாலை சானமாவு கிராமத்தில் கூட்டமாக சாலையை கடந்து சென்றன.

யானைகள் கடந்த செல்லும் வரை வாகனங்களை நிறுத்தி வைத்த வனத்துறையினர், அவை சாலையை கடந்த பின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT