முகப்பு
தமிழ்நாடு

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 7 மணி நேர தாமதத்தால் பயணிகள் கடும் அவதி

சென்னையில் இருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும்

தமிழ்நாடு

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 7 மணி நேர தாமதத்தால் பயணிகள் கடும் அவதி

சென்னையில் இருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

சென்னையில் இருந்து புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானர்.  

சென்னையிலிருந்து காரைக்குடி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமாகப் புறப்பட்ட அந்த ரயில், திண்டிவனம், விழுப்புரம் என ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருந்தது.

விருத்தாசம் அடுத்த பெண்ணாடம் அருகே கொல்லத்தங்குறிச்சி ரயில்வே கேட் அருகே வந்தபோது, ரயிலின் கடைசிப் பெட்டி சக்கரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது.

திடீர் தீ விபத்தையடுத்து பயணிகள் ரயிலில் இருந்து வேகமாக குதித்தனர். அருகில் உள்ள கிராம மக்கள் விரைந்து வந்து ரயிலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

அரியலூரை அடுத்த ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், முழுமையாக சோதனை செய்யப்பட்டது. பின்னர் அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

திருச்சிக்கு 8.30 மணியளவில் வந்து சேர வேண்டிய பல்லவன் ரயில் அதிகாலை 3 மணியளவில் வந்து சேர்ந்தது.

ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் 7 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக அவதிக்குள்ளானர்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →