தமிழ்நாடு

1.96 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ஆதார் பதிவு பாக்கி: தமிழக அரசு

DIN

தமிழகத்தில் 1.96 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட வேண்டியிருப்பதாக உணவு-கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் தெரிவித்தனர்.
பொது விநியோகத் திட்ட முழு கணினிமயமாக்கல், மின்னணு அட்டைகள் வழங்குதல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அவர்கள் பேசியது:
பொது விநியோகத் திட்ட கணினி மயமாக்கல் தொடர்பான இந்தக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான மின்னணு அட்டைகள் பெற்ற பிறகு அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால், கைப்பேசி செயலி, பொது மக்களுக்கான இணையதளம் (ற்ய்ல்க்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்) மற்றும் உதவி ஆணையாளர்கள், வட்ட வழங்கல் அலுவலங்களில் செய்து கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் செய்த பிறகு, புதிய மின்னணு அட்டையை அரசு இணைய சேவை மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
1.96 லட்சம் அட்டைகள் பாக்கி: தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக இதுவரை 86 லட்சத்து 17 ஆயிரம் புதிய மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்னணு அட்டைகளை அளிக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 1 கோடியே 90 லட்சத்து 80 ஆயிரத்து 693 குடும்ப அட்டைகளில் 1 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 615 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விவரங்கள் முழுமையாகவும், 51 லட்சத்து 59 ஆயிரத்து 482 அட்டைகளுக்கு பகுதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள 1 லட்சத்து 96 ஆயிரத்து 596 அட்டைகளுக்கு ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டியிருக்கின்றன என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் (பொறுப்பு) கே.கோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT