தமிழ்நாடு

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது! 

மெரினாவில் தடையை மீறி ஈழப்படுகொலை நினைவேந்தல் பேரணி நடத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

DIN

சென்னை: மெரினாவில் தடையை மீறி ஈழப்படுகொலை நினைவேந்தல் பேரணி நடத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் வகையில், கடந்த வரம் ஞாயிரன்று (21.05.17) சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சியை அனுசரிக்க திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் வ.கவுதமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பேரணியாக சென்றனர்.

உடன் மே 17 இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களும் பேரணியாக சென்றனர். தடையை மீறி பேரணியாகச் சென்றதாக அப்பொழுது அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் கவுதமன் மற்றும் வேல்முருகன் ஆகியயோர் விடுவிக்கப்பட்டனர்.  

தற்பொழுது அந்த வழக்கில் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT