தமிழ்நாடு

விலக்குப் பெற தமிழகத்தில் அவசரச் சட்டம் தேவை: ராமதாஸ்

DIN

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யத் தடை விதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து விலக்குப் பெறும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உழவர்களின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுவது மாடுகள்தான். அவர்களின் வாழ்வில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் தருணங்களில் உதவுவது மாடுகள்தான்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடையால், உழவர்கள் அவசரத் தேவைக்கு மாடுகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கால்நடைகள் பராமரிப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பிரிவில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது. இந்தச் சூழலில் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்கள் விரோத முடிவை திரும்பப்பெறச் செய்ய வேண்டும்.
ஆனால், மத்திய அரசு ஆணை பிறப்பித்து 5 நாள்களாகியும், இதுகுறித்து தமிழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையிலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறும் வகையில் புதிய அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை த அரசு கூட்ட வேண்டும். இதைச் செய்யத் தவறினால் பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT