தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாட்களில் தென்மேற்குப் பருவ மழை : வானிலை ஆய்வு மையம் 

DIN

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும், 2 நாட்களுக்குப் பிறகு, வெயில் படிப்படியாக குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 3 நாட்களில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நேற்று தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகத்திலும் விரைவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கேரளாவில் பெய்துள்ள மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறுகையில், தென்மேற்கு பருவமழை தொடக்கத்திலேயே கேரளாவிற்கு நல்ல மழை கிடைத்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டத்திலும் நல்ல மழை பெய்தது.. இது நிலை பெருமா என்பது கேள்விக்குறி?

இந்த மந்த நிலை பருவமழை தீவிரமடையும் வரை இன்னும் கொஞ்ச நாட்கள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT