முகப்பு
தமிழ்நாடு

அலுவலர்களை பணி செய்ய விடாத தந்தை, மகள் கைது

கந்தர்வகோட்டை அருகில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக தந்தை, மகளை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

கந்தர்வகோட்டை அருகில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக தந்தை, மகளை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பூர்ணிமா ( 30 ), கிராம நிர்வாக அலுவலர் அ. வீரபாண்டியன் ஆகியோர் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த மட்டாங்கால் கிராமத்தில் கருப்பையா என்பவரின் இடத்தை அளக்க முற்பட்டபோது, அவரின் வீட்டின் அருகிலிருக்கும் உறவினர் வெங்கடாஜலபதி (66), அவரது மகள் ரேகாமணி (45), பேரன் திருப்பதி (32) ஆகியோர் அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸில் அளித்த புகாரின் பேரில் வெங்கடாஜலபதி , ரேகாமணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →