முகப்பு
தமிழ்நாடு

பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத் துரோக வழக்கு: ஜவாஹிருல்லா கண்டனம்

பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா" என்ற தலைப்பில் நூலை எழுதியதற்காக பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத் துரோக வழக்கை பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 
ஏற்கெனவே பாஜகவின் மக்கள் விரோத செயல்களை விமர்சித்த காரணத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்து தமிழக அரசின் நடவடிக்கைக்கு குட்டு வைத்துள்ளது. எனவே, பேராசிரியர் ஜெயராமன் மீதான தேசத் துரோக வழக்கை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →