முகப்பு
தமிழ்நாடு

மணல் இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

மணல் கொள்ளையைத் தடுக்க வெளிநாட்டு மணல் இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

மணல் கொள்ளையைத் தடுக்க வெளிநாட்டு மணல் இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழும் முக்கிய ஆறுகளில் கடந்த பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டு, ஆற்று வளம் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது. நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக மணல் கொள்ளையடிக்கப்படுவதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பும் மக்களுக்கு உதவவில்லை.
இந்நிலையில்தான் ஒரு தனியார் நிறுவனம் மத்திய அரசிடம் உரிய அனுதி பெற்று, மலேசியாவிலிருந்து 53.334 மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்திருக்கிறது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனியார் நிறுவனம் விற்பனை செய்வதற்கு தமிழக அரசின் அனுமதி இல்லை என்று அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 
இதனால் தூத்துக்குடி துறைமுகத்திலேயே மணல் தேங்கிக் கிடக்கிறது. மணல் கொள்ளையால் தமிழக ஆறுகள் முற்றிலும் சீரழிந்துள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். மேலும், தேவையான விதிமுறைகளை வகுத்து, இறங்குமதி மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம் ஆற்று மணல் கொள்ளையும் குறையும்.

முழு கட்டுரையைப் படிக்க →