முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: உதவிப் பேராசிரியர் மீது புகார்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பயிற்சி பெற்று வரும் மாணவி, தனக்கு உதவிப் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பயிற்சி பெற்று வரும் மாணவி, தனக்கு உதவிப் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதாமணி, சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அந்த மாணவி கடந்த மாதம் 25-ஆம் தேதி புகார் மனுவை அனுப்பிவைத்தார்.
மனு விவரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2012-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்தேன். தற்போது மருத்துவப் படிப்பு முடிந்து, ஓராண்டு பயிற்சி மருத்துவம் பயின்று வருகிறேன். பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவில் கடந்த மாதம் 22-ஆம் தேதி பணியில் இருந்த போது, அந்தப் பிரிவின் உதவிப் பேராசிரியர் ஒருவர் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாணவி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனுவில், அவருடன் பயிலும் மாணவிகள் சிலரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலையில், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மாணவியின் தந்தை கல்லூரி முதல்வரை வியாழக்கிழமை சந்தித்து வலியுறுத்தினார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் எம்.வனிதாமணியிடம் கேட்ட போது, உதவிப் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி கொடுத்த புகார் தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதற்காக கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளர் ஏ.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணைக்குப் பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்.
புகார் கூறப்பட்ட உதவிப் பேராசிரியரின் மனைவியும் இந்தக் கல்லூரியில்தான் பணியாற்றி வருகிறார். இதுபோன்ற புகார் இந்தக் கல்லூரியில் இதுவரை எழுந்ததில்லை. எனினும், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →