தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைவு

DIN

ஆபரணத்தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.22,496-க்கு விற்பனையானது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், சர்வதேச பொருளாதாரச் சூழல் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக்காரணிகளாக இருக்கின்றன. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7 குறைந்து, ரூ.2,812-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ரூ.42.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.42,800 ஆகவும் இருந்தது. 
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்- இத்துடன் ஜி.எஸ்.டி. சேர்த்துக் கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் 2,812
1 பவுன் தங்கம் 22,496
1 கிராம் வெள்ளி 42.80
1 கிலோ வெள்ளி 42,800
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT