முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.
தமிழ்நாடு கொங்கு நாடு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் அதிமுகவின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
நலம் விசாரிப்பு: கோபாலபுரம் இல்லத்துக்கு வியாழக்கிழமை இரவு மூவரும் வந்தனர். அவர்களை திமுக நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். கருணாநிதியைச் சந்தித்து மூவரும் நலம் விசாரித்தனர். 
கருணாநிதி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விரைவில் அவர் பூரண குணமடைவார் எனவும் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →